fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஊடகங்களுக்கு தலைமறைவாகியிருந்த அரச புலனாய்வுத்துறையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்த்தனவினால் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான முக்கிய தகவல்கள்

ITN News Editor
By ITN News Editor ஜூலை 27, 2020 19:38

ஊடகங்களுக்கு தலைமறைவாகியிருந்த அரச புலனாய்வுத்துறையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்த்தனவினால் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான முக்கிய தகவல்கள்

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்த்தன ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று சாட்சியமளித்தார். இது தொடர்பாக செய்தி திரட்ட ஊடகங்களுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான முன் எச்சரிக்கை தகவல்கள் முதலில் நிலந்த ஜயவர்த்தனவிற்கே கிடைத்திருந்தது.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்த்தன கடந்த 16 நாட்களாக வாக்குமூலங்களை வழங்கியிருந்தார். அவர் முதல் தடவையாக இன்றைய தினம் ஆணைக்குழுவில் ஆஜரானார். அவர் உள்ளிட்ட மேலும் பலருக்கு இன்றைய தினம் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

தாக்குதல் இடம்பெறும் போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க , முன்னாள் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவண் விஜயவர்த்தன , முன்னாள் சட்டம் , சாமதானம் தொடர்பான அமைச்சர்களாக சாகல ரத்நாயக்க ரஞ்சித் மத்தும பண்டார, முன்னாள் பாதுகாப்பு செயலாளர்களான கபில வைத்திலங்கார, கருணாசேன ஹெட்டியாராய்ச்சி , ஹேமசிறிபெர்னாண்டோ, கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அவர்களுள் சட்டத்தரணி ஊடாகவோ, நேரயாகவோ ரணில் விக்கிரமசிங்க, ருவண் விஜயவர்த்தன, சாகலரத்தநாயக்க, ரஞ்சித் மத்தும பண்டரா, கபில வைத்தியலங்கார, சூளாகொடித்துவக்கு, நாலக்க டி சில்வா ஆகியோர் ஆணைக்குழுவில் ஆஜராகவில்லை.

சாட்சியங்கள் பெற்றுக்கொள்ள ஆரம்பிக்கப்பட்டபோது நிலந்த ஜயவர்த்ன சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி நளிந்த இந்ததிஸ்ஸ வேண்டுகோளொன்றை விடுத்தார். இந்த சாட்சி மூலம் தேசிய பாதுகாப்பு தொடர்பான அனுதாபமான பல விடயங்கள் வெளியிடயுள்ளமையினால் ஊடகங்களுக்கு அனுமதி வழங்கவேண்டாமென கேட்டுக்கொண்டுள்ளார். நிலந்த ஜயவர்த்தனவும் இந்த வேண்டுகோளை விடுத்தார். தான் வெளியிடும் இந்த விடயங்கள் ஊடாக தனக்கும் தனது குடும்பத்திற்கு தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படலாமென தெரிவித்தனர்.

வெளிநாட்டு புலனாய்வு பிரிவினருடன் உள்ள உறவுகள் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டால் அது பாதிப்பாக அமையுமென்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதி சொலிசிட்டர் ஜெனரல் கருத்து வெளியிடுகையில் ஊடகங்களுக்கு முன்னிலையில் இந்த சாட்சியாளர்களிடம் புலனாய்வு துறையினரின் கட்டமைப்பு மற்றும் அனுதாபமிக்க விடயங்கள் குறித்தும் கேள்வி எழுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் ஊடகவியலாளர்கள் இல்லாத நிலையில் நிலந்த ஜயவர்த்தனவிடம் கேள்விகள் தொடுக்கப்பட்டன.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 27, 2020 19:38

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க