வைத்தியர் என போலியாக அடையாளப்படுத்தி வத்துபிட்டிவல ஆதார வைத்தியசாலையின் பெண்கள் வாட் பிரிவிற்கு சென்ற நிலையில் கைதுசெய்யப்பட்ட இந்திய பிரஜை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் 4ம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது. ஸ்டெதஸ்கொப் கருவி மற்றும் வைத்திய உபகரணங்களுடன் சந்தேக நபர் வாட் தொகுதிக்கு நுளைந்துள்ளார்.
வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெறும் நோயாளர் ஒருவரை பார்வையிடுவதற்கு தான் வருகைதந்ததாக சந்தேக நபர் தெரிவித்துள்ளார். நோயாளர்களை பார்வையிடும் நேரம் நிறைவடைந்ததன் காரணமாக அவர், தொடர்பில் சந்தேகம் அடைந்த வைத்தியசாலை ஊழியர்கள் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தான் ஒரு வைத்தியர் என உறுதிப்படுத்த தவறியுள்ளார். அவர், திஹாரிய பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. அவர், இலங்கை பெண்ணை திருமணம் செய்து, பல வருடங்களாக வசித்து வந்துள்ளமை தெரிவந்துள்ளது. நிட்டம்புவ பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.