வியட்நாமில் கொவிட் 19 தொற்று பரவல் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்ட நால்வர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடந்த ஏப்ரல் மாதத்திற்கு பின்னர் வியட்நாமில் முதல் தடவையாக நோய் தொற்றாளர்கள் இனம்காணப்பட்டுள்ளனர். இதனால் சுற்றலாப்பயணிகள் அதிகளவில் வருகை தரும் வியட்நாமின் டா னாங் நகரம் மூடப்பட்டுள்ளது. எந்த ஒரு சுற்றுலாப்பயணியும் குறித்த நகருக்குள் வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக வியட்நாம் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
வியட்நாமில் கொவிட் 19 தொற்று பரவல் தொடர்பில் எச்சரிக்கை
படிக்க 0 நிமிடங்கள்