fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இலங்கையில் முதன் முதலாக மேற்கொள்ளப்பட்ட குழந்தைகளுக்கான ஈரல் மாற்று சத்திரசிகிச்சை வெற்றி

ITN News Editor
By ITN News Editor ஜூலை 27, 2020 08:51

இலங்கையில் முதன் முதலாக மேற்கொள்ளப்பட்ட குழந்தைகளுக்கான ஈரல் மாற்று சத்திரசிகிச்சை வெற்றி

இலங்கையில் முதன் முதலாக மேற்கொள்ளப்பட்ட குழந்தைகளுக்கான ஈரல் மாற்று சத்திரசிகிச்சை வெற்றியளித்துள்ளதாக, கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

ராகமை, ஈரல் மாற்று சத்திரசிகிச்சை குழுவுடன் இணைந்து, கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையில் வைத்திய நிபுணர்களினால் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விசேட சத்திரசிகிச்சை நிபுணர், வைத்தியர் ரொஹான் சிறிவர்தனவும், நாடளாவிய ரீதியிலுள்ள விசேட சத்திரசிகிச்சை நிபுணர்களும் இணைந்து கடந்த 14ஆம் திகதி சத்திரசிகிச்சையை மேற்கொண்டிருந்தனர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 9 வயதுடைய சிறுமியொருவருக்கே ஈரல் மாற்று சத்திரசிகிச்சை 12 மணித்தியாலங்களுக்கும் மேலாக மேற்கொள்ளப்பட்டது.

குறித்த சிறுமியின் ஈரல் இயக்கத்தில் ஏற்பட்ட பாதிப்பை தொடர்ந்து, அச்சிறுமியின் தாயிடமிருந்து பெறப்பட்ட ஈரலின் பகுதியிலிருந்து குறித்த ஈரல் மாற்று சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. உயிருள்ள ஒருவரிலிருந்து ஈரல் எடுக்கப்பட்டு இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட முதலாவது சத்திரசிகிச்சை இதுவாகும். இதற்கு முன்னர் குறித்த வைத்தியசாலையில் வயதானவர்களுக்கான ஈரல் பொருத்தும் 50 சத்திரசிகிச்சைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் முதற் தடவையாக சிறுமி ஒருவருக்கு இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 27, 2020 08:51

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க