fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சில சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்தி உண்மைக்கு புறம்பானது…!

ITN News Editor
By ITN News Editor ஜூலை 26, 2020 15:48

மற்றுமொரு கொவிட் 19 வைரஸ் தொற்றாளர் தப்பிச்சென்றுள்ளதாக சில சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்தி உண்மைக்கு புறம்பான போலி செய்தியென தேசிய தொற்றுநோய் ஆய்வு பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த போலி பிரச்சாரத்தையடுத்து, இது தொடர்பில் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் நபர்கள் இது குறித்தான தகவல்கள் கேட்பதாக ஆய்வு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் ஹசித்த அத்தனாயக்க தெரிவித்தார்.

தற்போது ஐடிஎச் உள்ளிட்ட கொவிட் 19 தொற்றாளர்கள் சிகிச்சை பெற்றுவருகின்ற சகல வைத்தியசாலைகளுக்கு அருகிலும் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதனால், தொற்றாளர்கள் தப்பி செல்வதற்கு எவ்வித வாய்ப்பும் இல்லையென வைத்தியர் ஹசித்த அத்தனாயக்க தெரிவித்துள்ளார். அதனால், தேவையற்ற மற்றும் பொய்யான பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டாமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

ITN News Editor
By ITN News Editor ஜூலை 26, 2020 15:48

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க