fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

3வது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இங்கிலாந்து பலமான நிலையில்

ITN News Editor
By ITN News Editor ஜூலை 26, 2020 11:23

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது. இரு அணிகளும் மென்ஷெஸ்டரில் மோதுகின்றன.

நேற்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேர நிறைவின் போது முதல் இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 6 விக்கட்டுகளை இழந்து 137 ஓட்டங்களை பெற்றிருந்தது. ஜேஸன் ஹோல்டர் 24 ஓட்டங்களுடனும், ஷேன் டௌரிஜ் 10 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர். பந்து வீச்சில் ஜேம்ஸ் என்டர்ஸன் மற்றும் ஸ்டுவர்ட் போர்ட் ஆகியோர் தலா இரு விக்கட்டுக்களை கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் இங்கிலாந்து அணி தமது முதல் இனிங்ஸில் 369 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது. ஒலிபொப் 91 ஓட்டங்களையும், ஜோஸ் பட்ளர் 67 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்து வீச்சில் கெமர் ரோச் 4 விக்கட்டுக்களை கைப்பற்றினார். இதற்கு அமைய மேற்கிந்திய தீவுகள் அணி 232 ஓட்டங்களால் பின்னிலையில் உள்ளமை குறிப்பிடதக்கது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 26, 2020 11:23

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo