வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட தினம் இன்று
Related Articles
பொது தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட தினமாக இன்றைய தினம் அமைந்துள்ளது. இன்றும் வாக்காளர் அட்டைகள் வீடுகளுக்கு விநியோகிக்கப்படவுள்ளதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார். இந்நிலையில் வாக்காளர் அட்டைகளில் 70 வீதமானவை வீடுகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் 29ம் திகதி வரை வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் பணி இடம்பெறவுள்ளது.
இதேவேளை கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வீடுகளில் தனிமைப்படுத்தக்கு உட்பட்டுள்ள நபர்கள் வாக்களிப்பதற்காக வழங்கப்பட்ட தினம் மறு சீரமைக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் மாதம் 4ம் திகதி அதற்கான சந்தர்ப்பம் காணப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் தனிமைப்படுத்தல் மத்தியநிலையங்களில் உள்ளவர்களுக்கென ஒதுக்கப்பட்ட எதிர்வரும் 31ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று, வீடுகளில் தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டுள்ள நபர்களுக்கும் வாக்களிக்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. வீடுகளில் தனிமைப்படுத்தளுக்கு உட்பட்டுள்ளவர்களுக்கென நடமாடும் வாக்களிப்பு மத்திய நிலையங்களை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வாக்காளர்கள் தொடர்பில் ஊடகவியலாளருக்கு எந்த ஒரு தகவல்களும் வழங்கப்டமாட்டாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.