போர்ப்ஸ் சஞ்சிகை வெளியிட்டுள்ள உலக பணக்காரர்கள் பட்டியலில், ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி 5வது இடத்தை பிடித்துள்ளார். முகேஷ் அம்பானியின் நிகர சொத்து மதிப்பு 75 பில்லியன் டாலர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க முதலீட்டாளர் வாரன் பஃபெட்டை பின்னுக்கு தள்ளி அவர் இந்த இடத்தை பிடித்துள்ளார். பேஸ்புக் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜூகர்பெர்க்கிற்கு அடுத்த இடத்தை அம்பானி பிடித்துள்ளார். மார்க்கின் சொத்து மதிப்பு 89 பில்லியன் டாலராக உள்ளது.