தான் கைது செய்யப்படுவதை தடுப்பதற்கான தடை உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி நீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் பிரதீப் அநுருத்த சம்பாயோ தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. பிற்பகல் 2.30 மணியளவில் மனு மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளது. முன்னாள் சிறைச்சாலை அத்தியட்சகர் உட்பட நால்வரை கைது செய்யுமாறு நீர் கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பிப்பித்துள்ளது. இந்நிலையில் முன்னாள் அத்தியட்சகர் பிரதீப் அநுருத்த சம்பாயோ கைது செய்வதற்கென குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் இரு விசேட குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

நீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு..
படிக்க 0 நிமிடங்கள்