fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,752 ஆக உயர்வு

ITN News Editor
By ITN News Editor ஜூலை 23, 2020 10:49

நாட்டில் நேற்றைய தினம் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 22 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் அவர்களில் 14 பேர் சவுதி அரேபியாவில் இருந்து நாட்டுக்கு வருகை தந்தவர்களாவர். மேலும் 7 பேர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாட்டுக்கு வருகை தந்தவர்கள் எனவும் மற்றையவர், புனர்வாழ்வு நிலையத்தில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களுடன் தொடர்புகளை பேணியவரெனவும் சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய நாட்டில் இதுவரை 2 ஆயிரத்து 752 வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 2 ஆயிரத்து 64 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். 677 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்று வருவதாகவும், 107 பேர் விசேட வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இதுவரையில் நாடு முழுவதிலும் ஒரு இலட்சத்து 43 ஆயிரத்து 673 பேருக்கு பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கொவிட் 19 தொற்றை தடுக்கும் செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 23, 2020 10:49

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க