fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ரவி கருணாநாயக்கவை நிதி மோசடி விசாரணை பிரிவில் ஆஜராகுமாறு உத்தரவு

ITN News Editor
By ITN News Editor ஜூலை 22, 2020 19:03

முன்னாள் பா. உ ரவி கருணாநாயக்கவை எதிர்வரும் 27ம் திகதி நிதி மோசடி விசாரணை பிரிவில் ஆஜராகுமாறு நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புறக்கோட்டை நீதிமன்ற நீதவான் அநுர திசாநாயக்கவினால் ரவி கருணாநாயக்கவிற்கு குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலதிக சொலிசிட்ட ஜெனரல் ஹரிப்ரியா ஜயசுந்தர முன்வைத்த கோரிக்கைக்கு அமையவே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் இரண்டாவது சந்தேகநபரான ரவி கருணாநாயக்க விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. நிதி மோசடி விசாரணை பிரிவு விசாரணைகளில் பங்கேற்குமாறு பல்வேறு சந்தர்ப்பங்களில் ஆஜராகுமாறு ரவி கருணாநாயக்கவுக்கு அழைப்பு விடுத்திருந்த போதும் தேர்தல் பிரசார பணிகள் காரணமாக ஆஜராகவில்லையென மேலதிக சொலிசிட்ட ஜெனரல் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிணைமுறி மோசடி தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்க ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகி பொய்யான சாட்சியங்களை வழங்கியுள்ளதாக முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பான வழக்கில் வாக்குமூலம் வழங்குமாறும் ரவி கருணாநாயக்கவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் குறித்த உத்தரவையும் அவர் புறக்கணித்துள்ளதாக நீதிமன்றத்தின் கனவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.

அதன் அடிப்படையில் இவ்வாறு எட்டு தினங்களுக்கு மேலாக அவர் புறக்கணிப்புக்களை மேற்கொண்டுள்ளதாக மேலதிக சொலிசிட்ட ஜெனரல் குறிப்பிட்டுள்ளார். வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டிருந்தால் விசேட சலுகைகளை வழங்க வேண்டுமென சட்டத்தில் குறிப்பிடப்படவில்லையெனவும் பொலிசாரின் கோரிக்கைகளுக்கு நீதிமன்றம் செவி சாய்க்க வேண்டுமெனவும் மேலதிக சொலிசிட்ட ஜெனரல் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார். விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் ரவி கருணாநாயக்க எதிர்வரும் 27ம் திகதி நிதி மோசடி விசாரணை பிரிவில் ஆஜராக வேண்டுமென நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 22, 2020 19:03

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க