fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சர்வதேசத்திற்கு ஏற்ற வகையில் டிஜிட்டல் முறையிலான பிறப்புச்சான்றிதழ்..

ITN News Editor
By ITN News Editor ஜூலை 22, 2020 13:01

சர்வதேசத்திற்கு ஏற்ற வகையில் டிஜிட்டல் முறையிலான பிறப்புச்சான்றிதழ் பொது தேர்தலின் பின் வழங்கப்படுமென பதிவாளர் நாயகம் என்.சி. விதானகே தெரிவித்துள்ளார். புதிய பிறப்புச்சான்றிதழில் பெற்றோரின் திருமண விபரங்கள் மற்றும் இனம் தொடர்பான தகவல்களை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தாய் தந்தையரின் திருமண விபரங்கள் தொடர்பில் சமூகத்தில் சிறுவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கருத்தில் கொண்டு குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக பதிவாளர் நாயகம் என்.சி. விதானகே தெரிவித்துள்ளார்.

புதிய பிறப்புச்சான்றிதழ்களில் நாட்டின் அனைத்து பிரஜைகளும் இலங்கையர்கள் என குறிப்பிடப்படுவார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை பிறப்பின் போது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தப்படும் வகையில் வழங்கப்படும் 12 இலக்கங்கள், எதிர்காலத்தில் தேசிய அடையாள அட்டை உள்ளிட்ட ஆவனங்களை வழங்குவதற்கும் பயன்படுத்தப்படவுள்ளதாக பதிவாளர் நாயகம் என்.சி. விதானகே குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை காணி பதிவுச்சான்றிதழையும் அடுத்த மாதம் முதல் இணையத்தளத்தின் ஊடாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதன் ஊடாக காணி பதிவுகளை துரிதமாக மேற்கொள்ள முடியுமென பதிவாளர் நாயகம் என் சி வித்தானகே தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 22, 2020 13:01

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க