fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மறைந்த ஆறுமுகன் தொண்டமானின் வீட்டுத்திட்ட கனவு நிறைவேற்றப்படும் : பிரதமர்

ITN News Editor
By ITN News Editor ஜூலை 22, 2020 13:03

மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் வீட்டுத்திட்ட கனவு நிறைவேற்றப்படுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பெருந்தோட்ட மக்கள் வாழக் கூடிய தகுதியான வீடுகளை வழங்குவது, ஆறுமுகம் தொண்டமானின் பிரதான எதிர்பார்ப்பாக காணப்பட்டது. தற்போது அவர் உயிரோடு இல்லை என்ற போதிலும், மக்களின் வீட்டு பிரச்சினையை தீர்க்க தேவையான நடவடிக்கைகள் அரசாங்கத்தின் மூலம் முன்னெடுக்கப்படுமென பிரதமர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மக்கள் கட்சி பேதத்தை மறந்து தமது பெறுமதியான வாக்குகளை நாட்டை கட்டியெழுப்ப பயன்படுத்துமாறு ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் உட்பட அனைத்து மக்களிடம் பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார். கண்டி பூஜாப்பிட்டிய பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கடந்த அரசாங்கத்தின் போது ஏற்பட்ட வீட்டுத் திட்ட முறைகள் தோல்வியடைந்தமை தொடர்பிலும் பிரதமர் நினைவு கூர்ந்தார். புதிய வீட்டுத் திட்ட முறையை தயாரிக்கும் போது, வாழ்வதற்கு தகுந்த சூழலுடனான வீட்டுத் திட்ட முறை ஒன்றை, தயாரிக்க வேண்டும் என பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டவுடன், உடனடியாக அனைத்து கிராம சேவகர் பிரிவிலும் ஒரு வீடு என்ற அடிப்படையில் 14 ஆயிரத்து 500 வீடுகளுக்கும் அதிக வீடுகள் மக்களிடம் கையளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 22, 2020 13:03

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க