fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இவ்வாண்டுக்கான நோபல் பரிசு விழா இரத்து…

ITN News Editor
By ITN News Editor ஜூலை 22, 2020 11:39

இவ்வாண்டுக்கான நோபல் பரிசு விழா இரத்து…

இவ்வாண்டுக்கான நோபல் பரிசு விழா இரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நிகழ்வு இரத்து செய்யப்பட்டுள்ளதாக நோபல் பரிசு நிர்வாக அமைப்பு தெரிவித்துள்ளது. ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் 10ம் திகதி நோபல் பரிசு விழா இடம்பெறும்.

மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி மற்றும் பொருளாதார துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கென நோபல் பரிசு ஒவ்வொரு வருடமும் வழங்கப்பட்டு வருகிறது. சுவீடன் தலைநகர் ஸ்டக்ஹோமில் நிகழ்வு இடம்பெறும். கடந்த 1956 ஆம் ஆண்டு உலக போர் காரணமாக நோபல் பரிசு விழா இரத்து செய்யப்பட்டது. தற்போது கொரோனா பரவல் காரணமாக விழா மீண்டும் இரத்து செய்யப்படுவதாக நோபல் பரிசு நிர்வாக அமைப்பு தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 22, 2020 11:39

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க