தபால் மூலம் வாக்களிக்க மேலும் 2 தினங்கள்
Related Articles
பொது தெர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பில் தமது வாக்கினை பதிவு செய்ய தவறியோருக்கென, மேலும் 2 தினங்கள் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்வரும் 24ஆம் மற்றும் 25ஆம் திகதிகளில் உரிய மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் வாக்குகளை பதிவு செய்ய முடியுமென தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 24ஆம் திகதி காலை 8.30 மணி முதல் பிற்பகள் 4.00 மணி வரையும், 25ஆம் திகதி காலை 8.30 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரையும் வாக்குகளை பதிவு செய்ய முடியும். பொது தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்ப பணிகள் கடந்த 13 ஆம் திகதி ஆரம்பமானது. 17ஆம் திகதி வாக்களிப்பு பணி நிறைவடைந்த நிலையில் கடந்த 20ஆம் மற்றும் 21ஆம் திகதிகளில் வாக்கினை பதிவு செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. தற்போது மேலும் 2 தினங்கள் நீடிக்கப்பட்டள்ளன.