மரக்கறி உற்பத்தியாளர்களின் விளைச்சல்களுக்கு உரிய விலையை பெற்றுக்கொள்ளக்கூடிய திட்டம்
Related Articles
மரக்கறி உற்பத்தியாளர்களுக்கு பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்க கூடிய வகையில் அவர்களது விளைச்சல்களுக்கு உரிய விலையை பெற்றுக்கொள்ளக்கூடிய திட்டங்களை வகுக்கப்போவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜக்ஸ தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியில் இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக வலப்பனை வாராந்த சந்தை வளவில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.பி ரத்நாயக்க , நிமல் பியதிஸ்ஸ ஆகியோர் இக்கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.
மரக்கறி மற்றும் பழ வகைகளை விவசாயியையும் நுகர்வோரையும் பாதுகாக்ககூடிய வகையில் நாடு முழுவதிலும் விநியோகிக்க வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்தார். அரச வங்கிகள் கடன் வழங்கும் விதம் நிவாரணம் அளிப்பதாக இல்லையென விவசாயிகள் ஜனாதிபதியிடம் எடுத்துக்கூறினர். பொரமடுல்ல மத்திய கல்லூரி மைதானம் அபிவிருத்தி செய்யப்பட்டு அதனை பாடசாலையுடன் இணைக்கும் பாலமொன்றை நிர்மாணித்து தருமாறு விடுத்த வேண்டுகோளை ஜனாதிபதி இராணவத் தளபதியிடம் ஒப்படைத்தார். நாளைய தினமே இது தொடர்பாக கண்டறிந்து அந்த கோரிக்கை துரிதமாக நிறைவேற்றிக்கொடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ளார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க ரிக்கில்லகஸ்கட பிரதேச சபை மைதானத்தில் ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டத்திலும் ஜனாதிபதி கலந்துகொண்டார். அங்கு மகாசங்கத்தினர் ஜனாதிபதியை ஆசிர்வதித்தனர். வலப்பனை வைத்தியசாலையில் பிக்கு வோட் ஒன்றை நிர்மாணித்து தருமாறு தேரர்கள் விடுத்த வேண்டுகளை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளை பணித்துள்ளார்.
வேட்பாளர் சதாசிவம் சுப்பையாக கந்தபொல சந்தை வளவில் ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டத்திலும் ஜனாதிபதி கலந்துகொண்டிருந்தார். அப்பகுதி தமிழ் மக்கள் ஜனாதிபதிக்கு மகத்தான வரவேற்பளித்தனர். அத்துடன் ஜனாதிபதிக்கு சர்வமத ஆசிர்வாதமும் வழங்கப்பட்டது.
தரமான விதைக் கிழங்கு தட்டுப்பாட்டுக்கு தீர்வு பெற்றுத் தருமாறு விவாசியகள் ஜனாதிபதியிடம் வேண்டுகோள்விடுத்தனர். கந்தப்பொலவிலிருந்து நுவரெலியா செல்லும் வழியில் இருமருங்கிலும் கூடியிருந்த மக்களுடன் ஜனாதிபதி நட்புறவுரீதியாக உரையாடினார். க்ரகரி வாவிக்கு சமீபமாக இடத்பெற்ற பொதுக்கூட்டத்திலும் ஜனாதிபதி கலந்துகொண்டார். பெண்கள் சுயதொழிலாக மேற்கொண்டுவரும் பஜட்பெக் மரக்கறி மற்றும் பழ வகைத்திட்டத்தையும் ஜனாதிபதி பாராட்டியுள்ளார்.