fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

விமான நிலையத்தில் நவீன தொழிநுட்ப வசதிகள் அடங்கிய பொதிகளை பரிசோதிக்கும் கட்டமைப்பு அறிமுகம்

ITN News Editor
By ITN News Editor ஜூலை 21, 2020 12:34

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நவீன தொழிநுட்ப வசதிகள் அடங்கிய பொதிகளை பரிசோதிக்கும் கட்டமைப்பு நேற்று முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்கு வருகை தரும் பயணிகளின் பொதிகளை பரிசோதிப்பதற்கான பாதுகாப்பு கண்காணிப்பு பொறிமுறையில் மற்றுமொரு திட்டமாக இது அமைந்துள்ளது. இதன் ஊடாக பயணிகள் பொதிகளை பரிசோதிக்க நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லையென இலங்கை விமான சேவைகள் அதிகார சபை அறிவித்துள்ளது.

இதுவரை காலமும் பயணிகளின் பொதிகளை சோதனை செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட கருவி சுமார் 19 வருட கால பாவனையில் இருந்த நிலையில் அதை மாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டது. இந்நிலையிலேயெ நவீன தொழிநுட்ப வசதிகள் ஊடனான புதிய கருவி பொருத்தப்பட்டுள்ளதாக இலங்கை விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 21, 2020 12:34

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க