fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கொரோனா தடுப்பு மருந்து : ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் முதற்கட்ட பரிசோதனை வெற்றி

ITN News Editor
By ITN News Editor ஜூலை 21, 2020 12:29

கொரோனா தடுப்பு மருந்து தொடர்பான ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் முதற்கட்ட பரிசோதனை வெற்றியளித்துள்ளது. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தினால் உருவாக்கப்பட்ட கொரோனா வைரஸ் தொடர்பான தடுப்பூசி பாதுகாப்பானது எனவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் எனவும் உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஆயிரத்து 77 பேரிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் ஊடாக கொரோனா வைரஸை எதரிர்த்து போராடக்கூடிய வெள்ளை இரத்த அணுக்களை உருவாக்க குறித்த மருந்து வழிவகுக்குமென தெரியவந்துள்ளது. சோதனை செய்யப்பட்ட பலருக்கு தடுப்பூசி வெற்றியளித்துள்ளது. ஆயிரம் தன்னார்வளர்களை உள்ளடக்கிய முதற்கட்ட ஆய்வுகளின் முடிவுகள் நேற்று வெளியாகின.

இந்நிலையில் குறித்த தடுப்பூசி பாதுகாப்பை வழங்குவதற்கு போதுமானதா என்பதை கண்டறிவதற்கு தொடர்ந்தும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இதேவேளை 10 கோடி தடுப்பூசிகளை ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழத்திடம் இருந்து கொள்வனவு செய்ய பிரிதானியா நடவடிக்கை எடுத்ததுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 21, 2020 12:29

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க