முகக்கவசம் அணியாத , சமூக இடைவெளியைப் பேணாத 3061 பேருக்கு எச்சரிக்கை
Related Articles
முகக்கவசம் அணியாத மற்றும் சமூக இடைவெளியைப் பேணாத 3 ஆயிரத்து 61 பேருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். மேல் மாகாணத்தில் கடந்த 24 மணித்தியாளங்களில் குறித்த விடயம் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது.
அதற்கமைய, முகக்கவசம் அணியாமை தொடர்பில் 2 ஆயிரத்து 93 பேரும், சமூக இடைவெளியைப் பேணாத 968 பேரும் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதாக மேல்மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதேவேளை, இன்று அதிகாலை 5 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாளங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த 349 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பெலிஸார் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோத மதுபானங்களை தம்வசம் வைத்திருந்த 206 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் பிடியாணைப் பிறப்பிக்கப்பட்ட 771 பேரும் விசேட சோதனையின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.