fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஈரானில் இரண்டரை கோடி பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி தெரிவிப்பு…

ITN News Editor
By ITN News Editor ஜூலை 19, 2020 14:10

உலகளவில் ஒரு கோடியே 44 இலட்சத்து 29 ஆயிரத்து 37க்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். அவர்களில் 86 இலட்சத்து 20 ஆயிரத்து 878 பேர் குணமடைந்துள்ளனர். எனினும் மரண எண்ணிக்கை தற்போது 6 இலட்சத்து 5 ஆயிரத்தை அண்மித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அதிக தொற்றாளர்கள் மற்றும் மரணங்கள் அமெரிக்காவில் பதிவாகியுள்ளன. 38 இலட்சத்து 33 அயிரத்து 270க்கும் அதிகமான தொற்றாளர்கள் அடையாளம்காணப்பட்டுள்ளதோடு, ஒரு இலட்சத்து 42 ஆயிரத்து 870க்கும் அதிக மரணங்கள் அங்கு பதிவாகியுள்ளன. பிரேசிலில் 20 இலட்சத்து 75 ஆயிரத்து 240க்கும் அதிகமானோர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். 78 ஆயிரத்து 800க்கும் அதிகமானோர் மரணித்துள்ளனர். இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 38 ஆயிரத்து 902 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. தொற்றாளர்களின் எண்ணிக்கை 10 இலட்சத்து 77 ஆயிரத்து 860ஐ கடந்துள்ளது. நேற்றைய தினத்தில் மாத்திரம் 543 பேர் அங்கு உயிரிழந்துள்ளனர். அதற்கமைய உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26 ஆயிரத்து 830ஐ அண்மித்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை ஈரானில் இதுவரை இரண்டரை கோடி மக்கள் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியருப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி ஹசன் ரௌஹாணி தெரிவித்துள்ளார். எதிர்வரும் நாட்களில் இது மூன்றரை கோடி பேராக அதிகரிக்கும் அபாயமுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 8 கோடி பேரை மக்கள் தொகையாக கொண்ட ஈரானில் இதுவரை இரண்டு இலட்சத்து 71 ஆயிரத்து 606 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளது. 13 ஆயிரத்து 979 பேர் மரணித்துள்ளனர். இந்நிலையிலேயே ஈரானில் இரண்டரை கோடி மக்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாகவும், 14 ஆயிரம் பேர் மரணித்துள்ளதாகவும் ஈரான் ஜனாதிபதி ஹசன் ரௌஹாணி தெரிவித்துள்ளார்.

 

 

ITN News Editor
By ITN News Editor ஜூலை 19, 2020 14:10

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க