fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இங்கிலாந்து – மேற்கிந்திய தீவுகள் 2வது டெஸ்ட் போட்டியின், 4ம் நாள் ஆட்டம் இன்று…

ITN News Editor
By ITN News Editor ஜூலை 19, 2020 14:08

சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின், இரண்டாவது போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று ஆரம்பமாகவுள்ளது. மென்ச்செஸ்டரில் போட்டி நடைபெறுகிறது. நேற்றைய தினம் மழை காரணமாக மூன்றாம் நாள் ஆட்டம் நடைபெறவில்லை. நேற்று முன்தினம் இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு கொண்டுவரப்படும்போது மேற்கிந்திய தீவுகள் அணி தமது முதல் இனிங்ஸிற்காக 14 ஒவர்களில் ஒரு விக்கட்டை இழந்து 32 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. ஏற்கனவே இங்கிலாந்து அணி முதல் இனிங்ஸில் 9 விக்கட்டுக்களை இழந்து 469 ஓட்டங்களை பெற்றது. பென் ஸ்டொக்ஸ் 176 ஓட்டங்களையும், டொம் சிப்லி 120 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். ரொஸ்டன் ச்சேஸ் 5 விக்கட்டுக்களை கைப்பற்றினார். அதற்கமைய மேற்கிந்திய தீவுகள் அணி, இங்கிலாந்து அணியை விட 437 ஓட்டங்களால் பின்னிலை பெற்றுள்ளது.

 

ITN News Editor
By ITN News Editor ஜூலை 19, 2020 14:08

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo