fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சஹ்ரானை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு கோரிய நிலையில் புலனாய்வு பிரிவின் பிரதானி ஒத்துழைக்க வில்லையென சாட்சியம்

ITN News Editor
By ITN News Editor ஜூலை 18, 2020 19:21

சஹ்ரான் ஹாசிமை கட்டுப்படுத்துவதற்கு உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் இடம்பெறுவதற்கு முன்னர் ஜனாதிபதியிடம் விசேட அனுமதியொன்றை பெற்றுத் தருமாறு தான் அரசபுலனாய்வு சேவையின் பணிப்பாளர் நிலந்த ஜயவர்டனவிடம் கோரிக்கை விடுத்ததாகவும் அதற்கான சந்தர்ப்பம் கிடைக்கப்பெறவில்லையென பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளையிடும் அதிகாரி வர்ண ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.

ஏப்ரல் 9 ம் திகதி இடம்பெற்ற புலனாய்வு தகவல்களை மீளாய்வு செய்யும்கூட்டத்தில் அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளர் நிலந்த ஜயவர்டன சஹ்ரான் ஹாசிம் தொடர்பில் ஆர்வத்துடன் கருத்துக்களை முன்வைத்தாலும் தாக்குதல் நடத்தப்படக்கூடும் என்பது தொடர்பிலான புலனாய்வு தகவல்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவில்லையென பிரதி பொலிஸ் மா அதிபர் வர்ண ஜயசுந்த குறிப்பிட்டுள்ளார்.

நிலந்த ஜயவர்த்தனவுக்கு அதன்போது கிடைக்கப்பெற்றிருந்த தாக்குதல் தொடர்பான எச்சரிக்கை புலனாய்வு தகவல்களை அன்றைய தினம் கலந்துரையாடியிருந்தால், கூட்டு படை நடவடிக்கைகளின் ஊடாக குறித்த தாக்குதலை தடுத்திருக்க கூடிய தெளிவான நிலைகாணப்பட்டதாக ஜயசுந்தர குறிப்பிட்டிருந்தார். உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் நடைபெறும் சந்தர்ப்பத்தில் பயங்கரவாத விசாரணைப்பிரிவின் பணிப்பாளராக செயற்பட்டவர் தற்போதய விசேட அதிரடிப்படையின் கட்டளையிடும் அதிகாரியே அவர் இன்றைய தினம் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கினார். அரச மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் அதன்போது வர்ண ஜயசுந்தரவிடம் இவ்வாறான கேள்வியொன்றை முன்வைத்தார். நாலக்க டி சில்வா பிரதி பொலிஸ் மா அதிபராக இருந்த காலப்பகுதியில் பயங்கரவாத விசாரணைப்பிரிவு சஹ்ரான் ஹாசிமை கைதுசெய்வதற்கு 2018 ம் ஆண்டு ஜூலை மாதம் 9 ம் திகதி பகிரங்க பிடிவிறாந்தொன்றை பெற்றுக்கொண்ட நிலையில் உங்களது காலப்பகுதியில் அது ஏன் நடைமுறைப்படுத்தப்படவில்லையென கேள்வி எழுப்பினார்.

குறித்த பிடிவிறாந்து பெற்றுக்கொண்டதன் பின்னர் பயங்கரவாத விசாரணைப்பிரிவின் அதிகாரிகள் காத்தான்குடி , அக்கரைப்பற்று உள்ளிட்ட பிரதேசங்களில் சுமார் 8 சந்தர்ப்பங்களில் சஹ்ரான் ஹாசிமை கைதுசெய்வதற்கான நடவடிக்கையை முன்னெடுத்ததாகவும் கடந்த வருடம் பெப்பரவரி மாதம் 28 ம் திகதி சஹ்ரான் ஹாசிமை தேடி கெக்குணுகொல்லவில் உள்ள அவரது மனைவின் வீட்டிற்கு சென்ற சந்தர்ப்பத்தில் குற்றப்புலனாய்வு திணைக்களம் தாம் குறித்த விசாரணைகளில் ஈடுபடுவதாகவும் குறித்த செயற்பாட்டிலிருந்து விலகுமாறு பயங்கரவாத விசாரணைப்பிரிவிற்கு அறிவுறுத்தியதாக வருண ஜயசுந்தர பதில் வழங்கினார்.

ஏப்ரல் மாதம் 9 ம் திகதி இடம்பெற்ற புலனாய்வு தகவல்களை மீளாய்வு செய்யும் கூட்டத்தில் கலந்துகொண்டிர்களா என மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சாட்சியிடம் வினவினார். தான் வேறு கடமைக்காக பாதுகாப்பு அமைச்சிற்கு சென்றிருந்த நிலையில் அப்போதய பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்த தன்னை குறித்த கூட்டத்திற்கு அழைத்து சென்றதாக வருண ஜயசுந்தர குறிப்பிட்டார். அதற்கு முன்னர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தான் புலனாய்வு தகவல்களை மீளாய்வு செய்யும் கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கவில்லையெனவும் அவர் குறிப்பிட்டார். இந்நிலையில் குறித்த கூட்டத்தில் அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளர் நிலந்த ஜயவர்டன சஹ்ரான் ஹாசிம் தொடர்பில் ஏனையவர்களின் கவனத்தை பெற்றுக்கொள்வதற்காக முயற்சித்ததாக அவர் குறிப்பிட்டார். தாக்குதல் தொடர்பில் புலனாய்வு தகவல்கள் கிடைக்கப்பெற்றிருந்த பின்புலத்தில் சாட்சியாளர் மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன என்பது தொடர்பில் அதன்போது மேலதிக சொலிசிட்டர் ஜெனரலினால் கேள்வி எழுப்பப்பட்டது.

தான் குறித்த சந்தர்ப்பத்தில் பயங்கரவாத விசாரணைப்பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் உதவி பொலிஸ் அதிகாரியை அழைத்து குறித்த ஆவணங்கள் தொடர்பில் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஆலோசனைகளை வழங்கியதாக சாட்சி குறிப்பிட்டார். அதேபோன்று சிலாபம் பிரதேசத்திற்கு புலனாய்வு பிரிவினரை அனுப்பி வனாத்தவில்லு பகுதியில் சஹ்ரான் ஹாசிம் மறைந்துள்ளாரா என்பது தொடர்பில் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு குறிப்பிட்டதாக அவர் தெரிவித்தார்.

அதேபோன்று சஹ்ரான் ஹாசிமின் முகநூல் கணக்கை ஏப்ரல் மாதம் 15 ம் திகதி வரை முடக்குவதற்கு தான் நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார். எனினும் ஏப்ரல் மாதம் 19 ம் திகதி அரச புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் நிலந்த ஜயவர்டன குழப்பம் அடைந்தவராக தனக்கு தொலைபேசி அழைப்பொன்றை ஏற்படுத்தியதாகவும் சாட்சி குறிப்பிட்டார்.

வருண காத்தான்குடிய சம்பவ நேரம் தெரியுமா? பொலிசார் அதனை இடிமுழக்கம் என சொல்கின்றார்கள் எனினும் அது அவ்வாறு இருக்க முடியாதென நிலந்த ஜயவர்டன குறிப்பிட்டதாக சாட்சி குறிப்பிட்டார். இந்த இடத்தில் எதேனும் ஒரு பாரிய பிரச்சினை காணப்படுவதாகவும் பாரிய தாக்குதலை நடத்தக்கூடிய சாத்தியம் இருப்பதாக நிலந்த ஜயவரட்ன பாரிய அழுத்தத்துடன் தன்னிடம் குறிப்பிட்டதாக வருண ஜயசுந்தர குறிப்பிட்டிருந்தார்.

அதன்போது அவரது பதவிக்கு மதிப்பளித்து சேர் எனக்கு ஜனாதிபதியிடம் கதைப்பதற்கு சந்தர்ப்பொன்றை பெற்றுத்தாருங்கள் உங்களுக்கு முடியுமாக இருந்தால், எஸ்.டி.எப். குழுவொன்றையும் பெற்றுத்;தாருங்கள் எனக்கு சஹ்ரானை கட்டுப்படுத்த முடியுமென கோரிக்கை விடுத்தாலும் அதற்கு பதில் கிடைக்கவில்லையென வருண ஜயசுந்தர குறிப்பிட்டிருந்தார். தான் பொலிஸ் விசேட அதிரடிப்படையில் புலனாய்வு பிரிவின் பணிப்பாளராக கடமையாற்றிய காலத்தில் கிழக்கு மாகாணத்தில் தீவிரவாத செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் பொருட்டு களுவாஞ்சிக்குடி மற்றும் அருகம்பே ஆகிய பிரதேசங்களில் இரண்டு விசேட முகாம்களை நிறுவியதோடு புலனாய்வு அதிகாரிகள் 13 பேரை கடமையில் அமர்த்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் 2018 ம் ஆண்டு ஒக்டோபர் மாதமளவில் பொலிஸ் விசேட அதரிடிப்படையின் முன்னாள் கட்டளையிடும் அதிகாரியான எம்.ஆர் லத்தீப் குறித்த அதிகாரிகளை புலனாய்வு பணியிலிருந்து நீக்கி முகாம்கள் இரண்டின் செயற்பாடுகளை முடக்கியிருந்ததாக வருண ஜயசுந்தர குறிப்பிட்டிருந்தார்.

அதன் அடிப்படையில் 2018 ம் ஆண்டு ஒக்டோபர் மாதத்திலிருந்து உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெறும் வரை பொலிஸ் விசேட அதிதரடிப்படையின் புலனாய் அதிகாரிகள் கிழக்குமாகாணத்தில் கடமையில் ஈடுபடவில்லையெனவும் குறித்த பகுதிகளிலிருந்து வராந்தம் கிடைக்கப்பெறும் புலனாய்வு தகவல்கள் கிடைக்கவில்லையெனவும் சாட்சி ஆணைக்குழுவில் குறிப்பிட்டார்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 18, 2020 19:21

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க