fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பான அறிவிப்பு

ITN News Editor
By ITN News Editor ஜூலை 18, 2020 15:22

பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள இடைக்கால விடுமுறையை மேலும் ஒரு வார காலத்தால் நீடிப்பதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது. இதற்கமைய 11ம், 12ம் மற்றும் 13ம் தரங்களை சேர்ந்த மாணவர்களுக்கு எதிர்வரும் 27ம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுமென கல்வியமைச்சின் செயலாளர் என்.எச்.எம். சித்ரானந்த தெரிவித்துள்ளார்.

தேர்தலின் பின்னர் வரும் திங்கட்கிழமையன்று ஏனைய தரங்களை சேர்ந்த மாணவர்களுக்கென பாடசாலை திறப்பது தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பரிந்துரை முன்வைத்துள்ளார். எனினும் இராஜாங்கனை மற்றும் வெலிகந்த ஆகிய கல்வி வலயங்களை சேர்ந்த பாடசாலைகள் ஓகஸ்ட் 10ம் திகதிக்கு முன்னர் திறக்கப்பட மாட்டாதென கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை உயர்தர பரீட்சை மற்றும் 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை என்பன நடைபெறும் தினங்கள் தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை அறிவிக்கப்படுமென கல்வியமைச்சின் செயலாளர் என்.எச்.எம். சித்ரானந்த தெரிவித்துள்ளார்.
.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 18, 2020 15:22

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க