fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

புங்குடுதீவு வீட்டுத்திட்டம் இன்றைய தினம் பயனாளிகளிடம் கையளிப்பு

ITN News Editor
By ITN News Editor ஜூலை 18, 2020 13:03

புங்குடுதீவு வீட்டுத்திட்டம் இன்றைய தினம் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது. தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் 14.8 மில்லியன் ரூபா செலவில் வீட்டுத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா உட்பட அரச அதிகாரிகள் வீட்டுத்திட்டத்தை பயனாளிகளிடம் கையளித்தனர்.

புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தில் காணியற்ற வறிய குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டன. 25 குடும்பங்களுக்கென குறித்த புதிய வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 18, 2020 13:03

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க