பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல்..
Related Articles
பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பில் இன்று பிற்பகல் 3 மணிக்கு விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும தலைமையில் கூட்டம் நடைபெறும் இதில் கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்கவுள்ளனர். பாடசாலைகளை திறப்பது குறித்து சுகாதார அமைச்சினால் பரிந்துரைகள் பல முன்வைக்கப்பட்டுள்ளன. இன்று இடம்பெறும் கலந்துரையாடலின் பின்னர், பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பில் தீர்மானிக்கப்படுமென கல்வியமைச்சின் செயலாளர் எம்.எச்.எம்.சித்ரானந்த தெரிவித்துள்ளார்.