சாதாரண தர பரீட்சை : மீள் திருத்த விண்ணப்ப கால எல்லை நீடிப்பு
Related Articles
2019 ம் ஆண்டு கல்விப்பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையின் மீள் திருத்தத்திற்கான விண்ணப்பங்களை அனுப்பிவைப்பதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய எதிர்வரும் 31 ம் திகதி வரை மீள் திருத்தத்திற்கான விண்ணப்பங்களை அனுப்பிவைக்க முடியுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத்பூஜித்த தெரிவித்துள்ளார்.
இதேவேளை இம்மாதம் மற்றும் அடுத்த மாதத்தில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த பரீட்சைகள் சில பிற்போடப்பட்டுள்ளன. இலங்கை தொழிநுட்ப சேவையின் மோட்டார் வாகன பரிசோதகர்களுக்கான தடைதாண்டல் பரீட்சை பிற்போடப்பட்டுள்ளது. அத்துடன் அதிபர் சேவையின் 2 ம் தர அதிகாரிகளுக்கான தடை தாண்டல் பரீட்சையும் பிற்போடப்பட்டுள்ளது. குறித்த பரீட்சைகள் மீண்டும் நடத்தப்படும் தினங்கள் தொடர்பில் அறிவிக்கப்படுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த குறிப்பிட்டுள்ளார்.