fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கொழும்பின் சில பகுதிகளுக்கு நாளை நீர்வெட்டு

ITN News Editor
By ITN News Editor ஜூலை 17, 2020 12:01

கொழும்பின் சில பகுதிகளுக்கு நாளைய தினம் 10 மணித்தியால நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது. நீர் வழங்கும் குழாய்களில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தப் பணிகள் காரணமாக நீர் வெட்டு அமுல்படுத்தப்படுவதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதற்கமைய நாளை இரவு 8 மணி முதல் 10 மணித்தியாலங்களுக்கு கொழும்பு 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படும். கொழும்பு 11 மற்றும் 12 ஆகிய பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் நீர்விநியோகம் மேற்கொள்ளப்படும்.

இதேவேளை நாளைய தினம் அம்பத்தல பகுதியில் பிற்பகல் 2 மணி முதல் 16 மணித்தியால நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது. அதற்கமைய கொலன்னாவ, ராஜகிரிய, மொரகஸ்முல்ல, ஒபேசேகரபுர, பண்டாரநாயக்கபுர, நாவல மற்றும் கொஸ்வத்த ஆகிய பகுதிகளில் நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 17, 2020 12:01

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க