2022 பீபா உலக கிண்ணத் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியீடு
Related Articles
2022 கால்பந்து உலக கிண்ண தொடருக்கான போட்டி அட்டவணை வெளியாகியுள்ளது. அதற்கமைய 2022 நவம்பர் மாதம் 21 ம் திகதி கட்டாரில் போட்டிகள் ஆரம்பமாகவுள்ளன. குழுநிலை போட்டிகள் நாளொன்றுக்கு 4 போட்டிகள் வீதம் 12 தினங்களுக்கு இடம்பெறும். 8 மைதானங்களில் 3 மணித்தியால இடைவெளியில் போட்டிகள் ஆரம்பமாகவுள்ளன. குழுநிலை போட்டிகளை அடுத்து 16 அணிகள் அடுத்த கட்டத்திற்கென தெரிவாகும்.
நாளொன்றுக்கு இரண்டு போட்டிகள் வீதம் இரண்டாம் கட்ட போட்டிகள் நடைபெறவுள்ளன. அதனையடுத்து காலிறுதி மற்றும் அரையிறுதி போட்டிகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. கால்பந்து உலக கிண்ண இறுதிப்போட்டி டிசம்பர் மாதம் 18 ம் திகதி டோஹாவில் இடம்பெறவுள்ளது.