fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அங்குலானையில் கைதுசெய்யப்பட்ட நபர்கள் இன்று நீதிமன்றில் ஆஜர்

ITN News Editor
By ITN News Editor ஜூலை 17, 2020 10:35

அங்குலானையில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று மொரட்டுவை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். நேற்றைய தினம் அங்குலானை பொலிஸ் நிலையத்திற்கு அருகில், வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 9 பெண்கள் உட்பட 14 பேர் கைதுசெய்யப்பட்டனர். அவர்கள் பொலிஸ் மீது கற்களை எறிந்து தாக்குதல் நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த 10ம் திகதி மொரட்டுவை – லுனாவ பகுதியில் பொலிசாரின் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்திய நபரொருவர், பொலிசாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தார். லுனாவ பகுதியைச் சேர்ந்த 39 வயதான மீனவரொருவரே உயிரிழந்தவரென பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸ் அதிகாரிகள் மூவர் பணிநீக்கம் செய்யப்பட்டு, விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் வழக்குடன் தொடர்புடைய இரு சாட்சியாளர்கள், அங்குலான பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டிருந்த நிலையில், அங்கு ஒன்றுகூடிய குழுவினர், கல்வீச்சு தாக்குதலை நடத்தியுள்ளனர்.. இந்நிலையில் கலக தடுப்பு பிரிவு பொலிசார் மற்றும் பொலிஸ் விசேட படைப்பிரிவினர் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 17, 2020 10:35

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க