fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தடைசெய்யப்பட்ட கடற்றொழில் முறைகளை வடக்கில் உடனடியாக தடைசெய்ய அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை

ITN News Editor
By ITN News Editor ஜூலை 17, 2020 10:22

வடபகுதி கடற்பரப்பில் தடைசெய்யப்பட்ட முறைகளில் கடற்றொழிலில் ஈடுபட முடியாதென அரசாங்கம் தெரிவித்துள்ளது. சட்டவிரோத கைத்தொழில் நடவடிக்கைகளை தடைசெய்ய அமைச்சரவை தீர்மானித்துள்ளது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்வைத்த அமைச்சரவை பத்திரம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதன் பின்னர், குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இதற்கமைய சட்டவிரோத தொழில் முறைகளை கட்டுப்படுத்தும் பணிகள் இன்றுமுதல் இடம்பெறவுள்ளன.

வடபகுதி கடற்றொழிலாளர்கள், தாம் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை அண்மையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் முன்வைத்திருந்தனர். சட்டவிரோத உபகரணங்கள் பயன்படுத்தப்படுவதால், தாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். அவற்றை தடுக்கும் நடவடிக்கையாகவே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்திருந்தார்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 17, 2020 10:22

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க