அங்குலான பொலிஸ் நிலையத்தின் மீது கற்களை கொண்டு தாக்குதல் நடத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைப்பதற்காக பொலிசார் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டனர். தற்போது அங்கு நிலமை கட்டுப்பாட்டில் உள்ளது.
லுணாவ பாலத்திற்கு சமீபமாக பொலிசாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த நபர் ஒருவர் மீது கடந்த 10 ம் திகதி பொலிசார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர். இதில் அவர் உயிரிழந்தார். சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை மொரட்டுவ மெஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் போது சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் அங்குலான பொலிஸ் நிலையம் மீது கற்களைகொண்டு தாக்குதல் நடத்தி கலகம் ஏற்படுத்தினர். இதனால் பொலிஸ் நிலையத்திற்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. மேல் மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்ன கோன் சம்பவ இடத்திற்கு சென்று நிலமைகளை கண்டறிந்தார்.