கார்பன் அற்ற ஜனாதிபதி தேர்தல் செயற்பாடுகளுக்காக வழங்கப்படும் சூழல் நேய பிரசாரத்திற்கான சான்றிதழ் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் வழங்கப்பட்டது, சுபீட்சத்த்தின் நோக்கு சுற்றாடல் கொள்கை ஏற்பாடுகளின் குழு இதனை ஜனாதிபதியிடம் கையளித்தது.
சஸ்டெய்னபிள் பியுச்சர் குறூப் எனும் சுற்றாடல் அமைப்பு இதனை உறுதிப்படுத்தியுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் ஜனாதிபதி தேர்தல் நடவடிக்கையின் போது சுற்றாடல் பாதிப்புக்கள் மற்றும் பசுமையான சுற்றுச் சூழல் பசுமையாக வைக்கப்பட்டிருந்ததாக அவ் அமைப்பு தெரிவித்துள்ளது. சஸ்டெய்னபிள் பியுச்சர் குறூப் அமைப்பு பசுமையான வாயு முகாமைத்துவம் தொடர்பான சான்றிதழை வழங்குவதற்கான அதிகாரம் பெற்ற நிறுவனமாகும். அவ் அமைப்பு பசுமையான வாயு முகாமைத்துவ துறையில் சர்வதேச அங்கீகாரத்தை பெற்ற ஒரு நிறுவனமும் ஆகும்.
முழு நாட்டையும் உள்ளடக்கும் விதத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக் கூட்டங்களில் பொலித்தீன், சுவரொட்டிகள், பெனர்கள், கட்டவுட்கள் போன்றன இன்றி தேர்தலை நடத்த ஜனாதிபதி வேட்பாளராக இருந்து அவர் செயற்பட்டுள்ளார். பொதுக் கூட்டங்களுக்கு வரும் வாகனங்களிலிருந்து வெளியிடப்படும் கார்பன் புகையை குறைக்கும் வகையில் மரநடுகை திட்டமொன்றையும் சகல பொதுக் கூட்டங்களை உள்ளடக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.