பொதுப் போக்குவரத்தில் யாசகம் செய்வதை தடுப்பதற்கு நடவடிக்கை
Related Articles
பொதுப் போக்குவரத்து சேவைகளில் யாசகம் செய்வதை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர அதிகாரிகளுக்கு அறிவுருத்தியுள்ளார். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சில யாசகர்கள் ரயில் மற்றும் பஸ்களில் பிரயாண சீட்டை பெற்றுக்கொண்டு சிறிது தூரம் சென்ற பின்னர் யாசகம் செய்வதாக தெரியவந்துள்ளது. அதனால் அவ்வாறான நபர்களுக்கு தண்டனை வழங்காமல் இருப்பதற்கான காரணத்தை தெளிவுப்படுத்துமாறும் அமைச்சர் அதிகரிகளிடம் கோரியுள்ளார்.