மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்ட 35 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மதுவரி திணைக்கள அதிகாரிகள் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர். இதன்போது பெருமளவு போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. கைதுசெய்யப்பட்டவர்களில் மூவர் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர்கள் எனவும் இருவர் அவற்றை விற்பனை செய்தவர்கள் எனவும் மதுவரி திணைக்கள அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். கசிப்பு உற்பத்திக்காக பயன்படுத்தப்பட்ட பொருட்கள் மற்றும் உபகரணங்களும் மதுவரி திணைக்கள அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மட்டக்களப்பில் விசேட சுற்றிவளைப்பு : 35 பேர் கைது
படிக்க 0 நிமிடங்கள்