கொவிட் 19 பரவல் காரணமாக, கனடா மற்றும் அமெரிக்காவில் அவசியமற்ற பயணங்களுக்கு தடைவிதிக்கப்படவுள்ளது. கொவிட் 19 பரவலால், உலகின் பல்வேறு நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. கனடாவின் பல்வேறு மாகாணங்களிலும் தொற்று பரவல் அதிகரித்து வருகின்றன. நோய் பரவுதலை கட்டுப்படுத்த கனடா அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அமெரிக்காவில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அவசியமில்லாத பயணங்களுக்கு தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.