கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கும் உத்தரவின் பேரில் முல்லேரியா பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சந்தேக நபரிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களுக்க அமைய 1 கிலோ 300 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டது.
குறித்த சந்தேக நபரிடம் விசாரணை செய்த போது முல்லேரியா பொலிஸ் பிரிவின் களனிய முல்ல பகுதியில் வீடு ஒன்றில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஹெரோயின் போதைப்பொருளே இவ்வாறு பொலிஸாரினால் கண்டெடுக்கப்பட்டது. சந்தேக நபர் புதுக்கடை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து எதிர்வரும் 23ஆம் திகதி வரை வளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் முல்லேரியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.