இந்திய அணி எதிர்வரும் டிசம்பர் மாதம் அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர் இடம்பெறவுள்ளது. இந்நிலையில் அவுஸ்திரேலியாவுக்கு செல்லும் இந்திய வீரர்கள் இரண்டு வாரங்களுக்கு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவுள்ளனர். எவ்வாறெனினும் வீரர்களின் மனோநிலையைக் கருத்திற் கொண்டு தனிமைப்படுத்தல் காலத்தை அவுஸ்திரேலியா குறைக்கும் என எதிர்பார்ப்பதாக இந்திய கிரிக்கட் சபை தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலிய அணி தற்போது வலுவான நிலையில் உள்ளது. அவ்வணியை எதிர்த்து போட்டியிட துடுப்பாட்டத்தில் சிறப்பாக செயற்படவேண்டடிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் கங்குலி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலால் வீரர்கள் பல மாதங்களாக கிரிக்கட் விளையாட்டில் ஈடுபடாமல் உள்ளனர். எவ்வாறெனினும் இந்திய வீரர்கள் உடற்தகுதியுடன் இருப்பதை உறுதி செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளதாகவும் இந்திய கிரிக்கட் சபை தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.