கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை தாய்நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கை நாளை முதல் நிறுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் ஓய்வு பெற்ற பேராசிரியர் ஜயனாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். குறித்த தீர்மானம் தற்காலிகமாகவே மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்தார். அண்மையில் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் வழிகாட்டலுக்கு அமைய கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட பல்வேறு நாடுகளில் நிர்கத்திக்குள்ளாகியிருந்த இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தற்போது கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நிலமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதன் பின்னர், இலங்கையர்களை தாய்நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கை வழமைக்கு திரும்புமென ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் ஓய்வு பெற்ற பேராசிரியர் ஜயனாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.