ஒரு தொகை கழிவு தேயிலையுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது
Related Articles
ஒரு தொகை கழிவு தேயிலையுடன் சந்தேக நபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சீதுவ – கொடுகொட பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே அவர்கள் கைதாகியுள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து 700 கிலோகிராம் கழிவு தேயிலை கைப்பற்றப்பட்டுள்ளது. தேயிலை களஞ்சியசாலை ஒன்றில் அவை பொதி செய்யப்படும் போது மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தலா 35 கிலோகிராம் நிறை கொண்ட 20 பொதிகள் பொலிஸாரினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன. சந்தேக நபர்கள் ஜாஎல மற்றும் ராகம பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.