fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சர்வதேச நாணய நிதியம் மற்றும் நட்புநாடுகளிடமிருந்து நிதி திரட்டும் முறை குறித்து ரணில் கருத்து..

ITN News Editor
By ITN News Editor ஜூலை 13, 2020 13:10

சர்வதேச நாணய நிதியம் மற்றும் நட்பு நாடுகளிடமிருந்து நிதியை திரட்ட முடியுமென ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அதற்காக நாட்டின் ஆட்சி அதிகாரத்தை தனக்கு வழங்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தம்பதெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே இவ்வா தெரிவித்தார். தம்பதெனிய தொகுதியில் போட்டியிடும் ஐக்கிய தேசியக்கட்சியின் வேட்பாளர்களின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் குறித்த மக்கள் சந்திப்பு ஐக்கிய தேசியக்கட்சியின் தம்பதெனிய அமைப்பாளர் மொஹான் விக்கிரமநாயக்கவினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அகிலவிராஜ்காரியவசம் உள்ளிட்ட பலர் குறித்த சந்திப்பில் பங்கேற்றனர்.

நாங்கள் கோருவது அரச அதிகாரத்தையே வேறு ஒன்றையும் அல்ல. ஒரு சிலர் கேட்கின்றார்கள், ஐக்கிய தேசியக்கட்சியா என. தற்போது நாட்டிலுள்ள பிரச்சினைகளை மக்களுக்கு தெளிவுபடுத்தி மக்களை ஈர்க்க வேண்டும். வெறுமனே வாக்குகளை வழங்கமாட்டார்கள். கடந்த பாராளுமன்றத்தில் இருந்த 225 பேரையும் தியவன்னாவையில் போடுமாறு மக்கள் கோருகின்றனர். தியவன்னாவையில் 225 பேரையும் போட்டால் சூழலியல் பிரச்சினை ஏற்படும். அதனால்தான் நான் புதியவர்களை பரிந்துரை செய்துள்ளேன். புதிய முகங்களை அறிமுகப்படுத்தியுள்ளேன். நானும் ஜயவர்த்தனபுர கோட்டையின் சூழலியல் பிரச்சினைக்கு பொறுப்பு கூற வேண்டுமா, கொரோனாவை இல்லாமல் செய்து பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கும் வீட்டு பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும் ஐக்கிய தேசியக்கட்சிக்கு வாக்களியுங்கள்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 13, 2020 13:10

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo