fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பொருளாதாரத்தை சீர்குலைத்த சிலர் இன்று பொருளாதாரம் தொடர்பில் பேசுவது நகைப்புக்குரியதென பிரதமர் தெரிவிப்பு

ITN News Editor
By ITN News Editor ஜூலை 13, 2020 13:12

தான்தோன்றித்தனமாக செயற்பட்டு நாட்டின் பொருளாதாரத்தை வீழ்ச்சியடையச் செய்த சிலர் இன்று பொருளாதார நிபுணர்களாக அறிக்கைகளை வெளியிடுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றிறைய உறுதிப்படுத்தும் வகையில் பிலியந்தலை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் இடம்பெற்ற போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே குறித்த மக்கள் சந்திப்பை ஒழுங்கு செய்திருந்தார். அமைச்சர்களான தினேஸ் குணவர்த்தன, கலாநிதி பந்துல குணவர்த்தன, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்டோரும் குறித்த நிகழ்வில் பங்கேற்றனர்.

ஐக்கிய தேசியக்கட்சி மேற்கொண்ட விடயங்கள் தொடர்பில் புதிதாக கூறுவதற்கு ஒன்றுமில்லை. இன்று இருவரும் பொருளாதார நிபுணர்களைப் போன்று கதைக்கின்றனர். அவர்கள் இருவரதும் நோக்கம் அரசாங்கத்தை கைப்பற்றுவது அல்ல. சிறி கொத்தவை கைப்பற்றுவதே. ஐக்கிய தேசியக்கட்சி காரர்களிடம் சிறி கொத்தவை கைப்பற்றுவதற்கு வாக்களிக்குமாறு கோருகின்றனர். பொருளாதார நிபுண ருக்கு கலாசார நிதியத்திலிருந்த நிதியை முகாமைத்துவம் செய்யமுடியாமல் போனது. அந்த நிதியத்தின் எஞ்சியுள்ள பணத்திலிருந்து சம்பளத்தை செலுத்த வேண்டியிருக்கின்றது. நான் அதனை மேற்கொள்ள முடியாதென குறிப்பிட்டுள்ளேன். 3 மாதங்களில் நிதியத்திலிருந்து வேறுபடுத்த வேண்டும். அதனால் வங்கி கடன் ஊடாக செலுத்துவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கின்றேன். ஒரு சில இடங்களில் 45 மில்லியன்கள், தெரிந்தவர்களுக்கு 35 மில்லியன்கள் என இவ்வாறே வழங்கியிருக்கின்றார்கள். முறையற்ற விதத்தில் பயன்படுத்தியிருக்கிறார்கள். அதுதொடர்பில் ஆணைக்குழுவிலும் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறானவர்களே மிகப்பெரும் பொருளாதார நிபுணர்களாக இன்று மாறியிருக்கின்றார்கள். எங்களுக்கு இன்று வெற்றிபெறுவதல்ல, மூன்றில் இரண்டு பெரும்பான்iயை தாருங்கள் அரசியல் அமைப்பை மாற்றிய தேவையான வசதி வாய்ப்புக்களை பெற்றுக்கொடுத்து நாட்டை மீண்டும் பொருளாதார வளர்ச்சியோடு முன்னெடுத்து செல்லவும் சுயாதீனமாக செயற்படவும், வளங்களை விற்பனை செய்யாது மக்களை பாதுகாத்துக்கொண்டு கட்டியெழுப்புவதற்கு எங்களோடு கைகோர்த்து கொள்ளுங்கள்.”

ITN News Editor
By ITN News Editor ஜூலை 13, 2020 13:12

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo