கைவிரல் அடையாளங்கள் பெறப்பட்டுள்ள 129 குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 80 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாண மற்றும் போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசப்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். கடந்த 12 மணித்தியாலங்களில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் ஊடாக குறித்த சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை 6 மணி முதல் இன்று அதிகாலை 5 மணி வரை மேல் மாகாணத்தில் குறித்த விசேட சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது. அதன்போது ஹெரோயின் தொடர்பாக 136 சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்ட்டதோடு சந்தேக நபர்கள் 136 பேரும் கைதுசெய்யப்பட்டள்ளனர். சட்டவிரோத மதுபானம் தொடர்பில் 124 சுற்றிவளைப்புக்கள் உட்பட 376 சுற்றிவளைப்புக்களில் 381 பேர் கைதுசெய்யப்பட்டதாக மேல் மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயம் தெரிவித்துள்ளது.