கொவிட் 19 தொற்று பரவலை தடுக்கும் வகையில் தென்னா பிரிக்காவில் மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நோய்ப்பரவும் அபாயம் அதிகரித்துள்ள நிலையில், அதனை கட்டுப்படுத்தும் வகையில் மேலும் பல்வேறு தடைகளை தென்னாபிரிக்க அரசாங்கம் அமுல்படுத்தியுள்ளது. இரவு நேர ஊரடங்கு, முகக்கவசம் அணிதல் போன்ற விதிகள் மீள அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தென்னாபிரிக்கா சுகாதார பிரிவு குறிப்பிட்டுள்ளது. மதுபான விற்பனைக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ள பின்னர் அது தளர்ப்பத்தப்பட்டது. எனினும் தற்போது மீண்டும் கொவிட் 19 தொற்று பரவும் அபாயம் தென்னாபிரிக்காவில் ஏற்ப்பட்டுள்ளதால், இவ்வருடத்தில் 2வது முறையாகவும் அந்நாட்டில் மதுபான விற்பனைக்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது. இதேவேளை தென்னாபிரிக்காவில் கொவிட் 19 தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 76 ஆயிரத்து 242ஆக பதிவாகியுள்ளது. அந்நாட்டில் இதுவரை 4 ஆயிரத்து 79 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இவ்வருட இறுதிக்குள் தமது நாட்டில் கொவிட் 19 தொற்றினால் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழக்கும் அபாயம் இருப்பதாக தென்னாபிரிக்க அரசாங்கம் மதிப்பீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தென்னாபிரிக்காவில் மதுபான விற்பனைக்கு தடை
படிக்க 1 நிமிடங்கள்