துருக்கியில் உள்ள உலக புகழ்பெற்ற ஹகியா சொபியா அருங்காட்சியகம் பள்ளி வாசலாக மாற்றப்பட்டமை கவலைக்குரியது என பாப்பரசர் பிரான்ஸிஸ் தெரிவித்துள்ளார். வத்திகானில் உரையாற்றிய அவர் தனது கவலையை துருக்கி அரசாங்கத்திடம் தெரிவிப்பதாக குறிப்பட்டுள்ளார். சுமார் ஆயிரத்து 500 வருடங்களுக்கு முன்னர் நிர்மாணிக்கப்பட்ட பழைமைவாத கிறிஸ்தவ வழிபாட்டுத்தலமான ஹகியா சொபியா தற்போது பள்ளிவாசலாக மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த பள்ளிவாசலில் எதிர்வரும் ஜூலை மாதம் 24ம் திகதி முதல் பிரார்த்தனைகள் ஆரம்பமாகுமென துருக்கி ஜனாதிபதி தையுப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.
துருக்கியில் உள்ள உலக புகழ்பெற்ற அருங்காட்சியகம் பள்ளி வாசலாக மாற்றம்
படிக்க 0 நிமிடங்கள்