இந்தியாவில் முகக்கவசங்கள் மற்றும் கையுறைகள் அடங்கிய கழிவுகளை அகற்றுவது பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது. அந்நாட்டில் கொவிட் 19 தொற்றாளர்களாக 8 இலட்சத்திற்கும் அதிகமானோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். முகக்கவசங்களை அணிய வேண்டுமென இந்திய மக்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பயன்படுத்தப்பட்ட முகக்கவசங்கள் மற்றும் கையுறைகளை அகற்றுவதற்கான முறையான திட்டமொன்று முன்னெடுக்கப்படவில்லை. இதனால் மக்கள் குறித்த கழிவுகளை வீட்டு கழிவுகளுடன் சேர்த்து அகற்றுவதால் சுத்தம் செய்யும் தொழிலாளர்கள் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர்.

இந்தியாவில் முகக்கவசங்கள் மற்றும் கையுறை கழிவுகளை அகற்றுவதில் பாரிய பிரச்சினை
படிக்க 0 நிமிடங்கள்