அடுத்த வருடத்தில் முதலாம் ஆண்டுக்காக மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பக்கால எல்லை நாளை மறுதினத்துடன் நிறைவடையவுள்ளது. குறித்த விண்ணப்பக்காலம் நீடிக்கப்படமாட்டாதென கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. ஏனைய வருடங்களில் முதலாம் அண்டுக்கான விண்ணப்பக்கால எல்லை ஜூன் மாதத்துடன் நிறைவடையும். எனினும் இவ்வருடம் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலை காரணமாக ஜூலை மாதம் வரை விண்ணப்பத்துக்கான காலஎல்லை வழக்கப்பட்டதாக கல்வியமைச்சு குறிப்பிட்டுள்ளது.

1ம் ஆண்டுக்காக மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பக்கால எல்லை நாளை மறுதினத்துடன் நிறைவு
படிக்க 0 நிமிடங்கள்