fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ட்ரம்ப் பொது இடமொன்றில் முதன்முறையாக முக கவசம் அணிந்துள்ளார்..

ITN News Editor
By ITN News Editor ஜூலை 12, 2020 15:55

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பொது இடமொன்றில் முதன்முறையாக முக கவசம் அணிந்துள்ளார். அந்நாட்டில் கொவிட் – 19 தொற்று அதிக பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. எனினும் நோயை கட்டுப்படுத்துவதற்கு ஜனாதிபதி ட்ரம்ப் தலைமையிலான அரசாங்கம் செயற்திறன்மிக்க நடவடிக்கைகளை எடுக்க தவறியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் குற்றம் சுமத்தியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவதில்லையென விமர்சனம் வெளியிடப்பட்டது. இந்நிலையில் வொஷிங்டனிலுள்ள இராணுவ வைத்தியசாலைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி ட்ரம்ப் முதன்முறையாக முக கவசம் அணிந்து சென்றுள்ளார். சிகிச்சைப்பெற்று வரும் இராணுவ வீரர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களை இதன்போது அவர் சந்தித்து கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 12, 2020 15:55

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க