fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இன்று  மழை கொண்ட வானிலை

ITN News Editor
By ITN News Editor ஜூலை 12, 2020 10:40

நாட்டின் பல பகுதிகளில் இன்று  மழைகொண்ட வானிலை நிலவுகின்றது. குறித்த வானிலை இன்றைய நாள் முழுவதும் நீடிக்கலாமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா, கிழக்கு, வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. சில இடங்களில் 50 மில்லி மீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகுமென வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை நாட்டை சூழவுள்ள கடற்பரப்புக்களிலும் மழை பெய்யுமெனவும், அதன்போது காற்றின்வேகம் மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 12, 2020 10:40

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க