fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

முதல் டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இங்கிலாந்து அணி 99 ஓட்டங்களால் பின்னிலையில்

ITN News Editor
By ITN News Editor ஜூலை 11, 2020 13:42

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட்கிரிக்கட் போட்டியின் 4ம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது. இரு அணிகளும் சவுத்ஹெம்டனில் மோதுகின்றன. நேற்றைய 3ம் நாள் ஆட்டநேர முடிவின் போது , தமது இரண்டாவது இனிங்சில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி விக்கட் இழப்பின்றி 15 ஓட்டங்களை பெற்றிருந்தது.

ரொரி பேன்ஸ் 10 ஓட்டங்களுடனும், டொம் ஸிப்லே 5 ஓட்டங்களுடனும் களத்திலுள்ளனர். இந்நிலையில் மேற்கிந்தியதீவுகள் அணி தமது முதல் இனிங்சிற்காக 318 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது. ப்ரத் வைட் 65 ஒட்டங்களையும், டவ்ருச் 61 ஒட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் பென் ஸ்டோக்ஸ் 4 விக்கட்டுகளை கைப்பற்றினார். இதேவேளை இங்கிலாந்து அணி தமது முதல் இனிங்சில் 204 ஓட்டங்களை பெற்றது. இதற்கமைய 99 ஓட்டங்களால் இங்கிலாந்து அணி பின்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 11, 2020 13:42

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo