fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சீனாவில் நடைபெறவிருந்த அனைத்து சர்வதேசப் போட்டிகளும் இரத்து

ITN News Editor
By ITN News Editor ஜூலை 11, 2020 12:05

சீனாவில் நடைபெறவிருந்த அனைத்து சர்வதேசப் போட்டிகளும் இரத்து

சீனாவில் நடைபெறவிருந்த அனைத்து வகையான சர்வதேச போட்டிகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன. அங்கு மீண்டும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால், இவ்வருடம் நடைபெறவிருந்த அனைத்து சர்வதேச போட்டிகளையும் இரத்து செய்வதாக சீன அரசாங்கம் அறிவித்துள்ளது. எனினும் 2022 குளிர்கால ஒலிம்பிக்போட்டிக்கான சோதனை மட்டும் நடைபெறுமென சீனா குறிப்பிட்டுள்ளது. இவ்வருடம் பல்வேறு சர்வதேச போட்டிகளை நடத்த ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அவற்றை நடத்தமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சர்வதேச போட்டித்தொடர்களை இரத்து செய்ய தீர்மானித்ததாக சீன அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 11, 2020 12:05

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo